இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததன் மூலம், அந்தணியின் கேப்டன் மலிங்கா மோசமான சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது.
மலிங்கா கேப்டனாக இருந்து இலங்கை அணி தோல்வியடைந்த 14-வது போட்டியாகும். இதன் மூலம் மலிங்கா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
மலிங்கா கேப்டனாக இருந்த 22 டி20 போட்டிகளில் இலங்கை 8 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 போட்டிகளில்(குறைந்த பட்சம் 20 போட்டிகள்) குறைந்த வெற்றியை பதிவு செய்த கேப்டன்களின் வரிசையில் மலிங்கா இப்போது முதலிடத்தில் உள்ளார்.
இவர் 31.8 சதவீதத்துடன் முதலிடத்திலும், இதற்கு அடுத்தபடியாக வங்கதேச அணி வீரரான ஷகிப் அல்ஹசன் 33.3 சதவீதம், முஸ்தபிசுர் ரஹீம் 34.8 சதவீதம், மஸ்ரபே மோர்தசா 35.7 சதவீதம், மேற்கிந்திய தீவு வீரரான கார்லஸ் பரத்வெயிட் 36.7 சதவிதத்துடன் அடுத்தடுத்து உள்ளனர்.