செங்குன்றம் பகுதியை சார்ந்த முன்னாள் பேருந்து நடத்துனர், ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் சென்னை செங்குன்றம் பகுதியை சார்ந்தவர் கனெக்ஷன் (வயது 65). இவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இங்குள்ள வடகரை பகுதியில் இருக்கும் பள்ளியில் இருந்து 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி வீட்டிற்கு வந்து கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில்., சிறுமியை அழைத்த காம கிடூறன் சிறுமியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டு இருக்கும் போது., திடீரென முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளான்.. மேலும்., சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டுள்ளான்.
இதனால் அதிர்ந்து போன சிறுமி சத்தமிடவே., அங்கிருந்த மக்கள் கணேசனிடம் இருந்து சிறுமியை காப்பாற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்ற சிறுமி பெற்றோரிகளிடம் நடந்ததை கூறி கதறியழுதுள்ளார்.
இதனை கேட்டு பதறிப்போன பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கணேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.