பிரபல நடிகையான சமந்தா தெலுங்கு நடிகரான நாகர்ஜுனா மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். சமந்தா திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் நடித்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில்., கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இல்லத்தில் உள்ள செல்ல நாய்க்குட்டியின் கழுத்தில் ” எனது முதல் கணவர் ” என்று எழுதிய வாசகத்தினை தொங்க விட்டவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்தார்.
இந்த புகைப்படம் குறித்து நாக சைதன்யா ஏதும் பேசாமல் அமைதிக்காத்த நிலையில்., ரசிகர்கள் மூலமாக சமந்தாவிற்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. மேலும்., கணவரை இதனை போன்று அவமானப்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பினர்.
திருமணம் முடித்த நாட்களில் இருந்து சமந்தா – நாக சைதன்யாவுடைய குடும்பத்தாருடன் நல்லிணக்கமாக இருந்து வரும் நிலையில்., கடந்த சில மாதங்களாக என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
குடும்பம் சார்ந்த விழாக்களையும் புறக்கணித்து வரும் நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற குடும்ப விழாவிலும் சமந்தா பங்கேற்க்கவில்லை. இதனைப்போன்று நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவுடைய திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியிலும் சமந்தா கலந்துகொள்ளாத நிலையில்., இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்கு சென்றாலும் கணவருடன் சென்று வந்த சமந்தா தற்போது கணவரை தனிமையில் தவிக்கவிட்டு வருகிறார். இந்த நிலையில்., தற்போது கவர்ச்சியான ஆடையணிந்து சமந்தா நிகழ்ச்சிக்கு வந்த புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது.