நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு பிரதான கட்சிகளும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றன.
இதில் ஐக்கிய தேசியக்கட்சி மிகவும் மோசமாக அதுவும் தலைவர் பதவி தொடர்பில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான போட்டி இன்னும் முடியவில்லை.
ஏதிர்வரும் வியாழக்கிழமை இந்தப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க தரப்பில் ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, தயா கமகே, வஜிர அபேவரத்தன போன்றோர் செயற்படுகின்றனர்.
சஜித் தரப்பில் ஹரின் பெர்ணான்டோ, அஜித் பெரேரா போன்றோர் செயற்படுகின்றனர். முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் நிலைப்பாடு இன்னும் தெளிவில்லை.
அவர் தொடர்ந்தும் வெளிநாட்டில் தங்கியிருக்கிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பொறுத்தவரையில் அது பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செல்வதில் பிரச்சினையை எதிர்கொள்கிறது.
இதனைவிட நாடாளுமன்ற தேர்தலின்போது வேட்பாளர் நியமனம் தொடர்பில் இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை.
அதனை விட முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான முரண்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்துக்காக இரண்டு தரப்பும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது கட்சியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.