பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் வெற்றிகரமாக தொடர்ந்து முதலிடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
காரணம் கதைக்களம், நாயகன்- நாயகிக்கு இடையேயான காதல், பிரபலங்களின் எதார்த்தமான நடிப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.
இக்கதையின் நாயகனான கார்த்திக் ராஜ், கனா காணும் காலங்களில் அறிமுகமாகி ஆபிஸ் சீரியலில் பிரபலமானவர்.
எதையும் முகத்துக்கு நேராக வெளிப்படையாக பேசும் இயல்புடையவர், இதனாலேயே தான் பல எதிரிகளை சம்பாதித்ததாக சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா மேடையில் அவரே தெரிவித்தார்.
இதுதவிர இயல்பாகவே அன்பு செலுத்தும் குணமடைய கார்த்திக் ராஜ், தான் சம்பாதிக்கும் பணத்தில் பல ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்து வருகிறாராம்.
செம்பருத்தி சீரியலில் இவருக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது, இந்த பணத்தையும் ஏழைகளுக்காக செலவிட்டு வருகிறாராம் கார்த்திக் ராஜ்.