பல்வேறு செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய மேற்கொண்டாலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டதைப் போலவே தாம் உணர்வதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கைப்பிரகடனத்தை நிறைவேற்ற நாம் ஆதரவு வழங்குவோம்.
எனினும் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிட்டு, மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்க அரசாங்கம் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து விட்டன. அரிசி விலை அதிகரித்து விட்டது. இதிலிருந்து மக்களை திசை திருப்பவே இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.