யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிாிவினருக்கு வீடு வழங்கியவர்மீது மிளகாய் துாள் வீசப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது, கடையிலிருந்த பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,
குடத்தனை பகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற இனந்தொியாத குழு ஒன்று வா்த்தக நிலைய உாிமை யாளருக்கு மிளகாய் துாள் வீசி தாக்குதல் நடாத்தியதுடன்,அவரின் வா்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை திருடி சென்றிருக்கின்றனா்.
குறித்த வா்த்தக நிலைய உாிமையாளா் மணல் கடத்தலை தடுப்பதற்கான சிறப்பு பொலிஸ் பிாிவுக்கு வீடு வாடகைக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில்,பொலிசாருக்கு விடு வழங்கிய காரணமாகவே அவர்மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடா்ந்து அப்பகுதியில் பொலிஸாா் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.