பதுளையிலுள்ள அரச நிறுவனமொன்றின் பொது கழிப்பறையில் பெண்களை இரகசியமாக வீடியோ படம் பிடித்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.
கைதான நபர் அந்த அலுவலகத்தின் பணியாளர் என தெரிவிக்கபடுகின்றது.
இன்ரையதினம் குறித்த நபரை அலுவலகத்தில் வைத்து பதுளை பொலிசார் கைது செய்தனர்.
அத்துடன் சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியில் அலுவலகத்தில் உள்ள பெண்களின் வீடியோ காட்சிகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் வாளியில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கழிப்பறையின் ஒரு பெண் ஊழியர் அதைக் கண்டு அலுவலகத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்ந்லையில் கைதானவர் 40 வயதுடையவர் எனவும், அவர் தனது முதல் மனைவியை பிரிந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.