சாம்பியாவில் மாங்காய் சாப்பிடுவதற்காக, அங்குள்ள ஒரு தங்கும் விடுதியின் சுவரை தாண்டிய யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெற்கு லுங்கா தேசிய பூங்கா பகுதியில் அமைந்திருக்கும் எம்ஃபுவே தங்கும் விடுதியின் சுவரை தாண்டி யானை ஒன்று உள்ளே வந்தது.
சற்றும் தடுமாறாமல் தனது கால்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து வந்ததை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதுகுறித்து விடுதியின் மேலாளர், யானை மிகவும் நேர்த்தியான வழியை தேர்ந்தெடுத்து வந்ததாகவும், யானையின் யோசனையை கண்டு சுற்றுலா பயணிகள் வியந்ததாகவும் தெரிவித்தார்.