பகல்நிலவு தொடரில் பிரபலமான நடிகர் முகமது அசிமுக்கும், அத்தொடரில் நடித்த நாயகிக்கும் பழக்கம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அது என்னுடைய பர்சனல் என பதிலளித்துள்ளார் அசிம்.
சமீபத்தில் அசிம், தன்னுடைய மகனின் படத்தை வெளியிட்டு இவன் தான் என்னுடைய உலகம் என பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், என்னைப் பற்றிய வதந்தி ஒன்று பரவியது, அதை பற்றி பேச விருப்பமில்லை, என்னுடைய பர்சனல் அது.
என் மகன் தான் என்னுடைய உலகம், அவனைத்தவிர இந்த உலகத்தில் எதுவும் முக்கியமில்லை.
அதை இந்த உலகத்துக்கு சொல்வதற்காகவே புகைப்படத்தை பகிர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.