பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பெற்றவர் இயக்குனர் சேரன். டைட்டில் கிடைக்காவிட்டாலும் மக்களின் மனங்கள் இவருக்கு பரிசாக கிடைத்து விட்டன.
இந்நிகழ்ச்சியால் அவரை தற்போது சேரப்பா என்றே பலரும் அழைக்கிறார்கள். அவரின் இயக்கத்தில் வந்த படங்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. மீனா, பார்த்திபன் ஜோடி இதில் நடித்திருந்தார்கள்.
1997 ல் வந்த இப்படம் தற்போது 23 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை #23YrsOfBharathiKannamma என டேக் போட்டு கொண்டாடிவருகிறார்கள்