முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் பொங்கல் திருநாளான நேற்றைய தினம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பொங்கல் பொங்கி சந்தோசமாக பொழுதை கழித்தனர்.
அதுமட்டுமன்றி இனம் மதம் மொழி பேதமின்றி பலதரப்பட்டவர்களாலும் தமிழர் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயந்த செனவிரத்னவின் தலைமையில் இந்த பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு சாந்தியும் சமாதானமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என்றும் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் இருந்து அந்நாடு விரைவில் விடுபடவேண்டும் என்றும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.