இந்தியா சென்று வசித்து வந்த இலங்கையர் ஒருவர் இந்தியாவில் இரண்டரை வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையைச் சேர்ந்த 36 வயதுடைய முகமது ரிபாஸ் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வேலை நிமித்தமாக டுபாய் சென்றார்.
அங்கிருந்து 2009 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை சென்று துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்தார்.
பின்னர் கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த ரோஷன் சல்மா என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கீழக்கரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார் முகமது ரிபாஸ். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதைவஸ்து கடத்தியதாக கியூ பிரிவு பொலிஸார் ரியாஸை கைது செய்தனர்.
கடந்த 2019 ஏப்ரலில் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து வாட்ஸ் அப் குரூப் தொடங்கி இஸ்லாத்திற்கு ஆதரவாகவும், இஸ்லாம் அல்லாதோருக்கு எதிராகவும் பிரசாரம் செய்வதுடன், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டி வந்தனர்.
இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் குற்றங்கள் புரிந்த முகமது ரிபாஸ், வெளிநாடுகளில் வேலை நிமித்தமாத ஆட்களை சட்ட விரோதமாக அனுப்பி வந்தார்.
இதனை அடுத்து இவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது. இவ் ஆவணத்தை மறைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு மூலம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்றார்.
இது குறித்து காஞ்சிரங்குடி வி.ஏ.ஓ, கீழக்கரை பொலிஸில் புகார் அளித்தார். அதன்படி, நன்னடத்தை பிணைய காலமான 2022 நவம்பர் 19 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உத்தரவிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.