தந்தை அலுவலகத்தில், உயர் பதவியில் இருக்க, மகன் தெருவில் பிச்சை எடுத்து வாழ்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா என்ற இடத்தில் உள்ள கோவில் வாசலில், இளைஞர் ஒருவர் காலில் அடிப்பட்டு கிடந்துள்ளார். அவரை கண்ட சகில் என்பவர் அருகில் சென்ற முதலுதவி வழங்கி அவருக்கு உதவியுள்ளார்.
பின் இளைஞரிடம் அவரை பற்றி விசாரித்துள்ளார். ஆனால், தனன்ஜெய் என்று பெயர் குறிப்பிட்ட அந்த இளைஞன் மற்ற விடயங்கள் எதுவும் நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பின் தனன்ஜெயிடம், உறவினர்கள் யாருடையதவாது அலைப்பேசி எண் தெரியுமா என்று சகில் கேட்டுள்ளார். தனன் ஒரு எண்ணை நினைவு படுத்தி கூறியுள்ளார்.
சகில் அந்த எண்ணிற்கு அழைத்த போது, தனன்னின் மாமா அலைப்பேசியை எடுத்து விசாரித்துள்ளார். அவர், தனது மருமகன் இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன விவரம் தெரிவிக்க உடனடியாக, தனனின் சகோதரி நேகா-வை அனுப்பி வைத்துள்ளார்.
அன்று மாலை தனன்னை காணவந்த நேகா தனது தம்பி என்று உறுதி செய்துள்ளார். மேலும், தனனும், நேகா-வை கண்டறிந்துள்ளார். இருவரும் சொத்த ஊரான உத்தரபிரதேஷ மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.
தனன்ஜெய்-ன் தந்தை ஒரு அலுவலகத்தில், மனித வளமேம்பாட்டுத்துறை அதிகாரியாக இருந்துள்ளார். தனன் தொடர்ந்து போதை பொருட்களுக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு தொலைந்து போனதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.