பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு தொடர்பாக பல கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல,
ரஞ்சன் ராமநாயக்கவை மனநல மருத்துவரிடம் காண்பிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















