ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு சேவையில் மூத்த அதிகாரியாக பணியாற்றிய ஜேர்மானியர் ஒருவர் உட்பட மூவர் மீது, சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகம் ஏற்பட்டதின்பேரில், பொலிசார் ரெய்டுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
ஐந்தாம் தலைமுறை மொபைல் வலைப்பின்னல் அமைப்பை கட்டமைக்கும் சீன தொலைக்கட்டுப்பாட்டு நிறுவனமான Huaweiயை தவிர்க்குமாறு ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா ஏற்கனவே அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், சீனாவுக்காக உளவுபார்த்ததாக மூன்று பேரைக் குறிவைத்து ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. பிரஸ்ஸல்ஸ், பெர்லின், Baden-Wuerttemberg மற்றும் பவேரியா ஆகிய இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.
குறிப்பிட்ட மூவரில், ஒருவர் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு சேவையில் பல முக்கிய பொறுப்புகள் வகித்துள்ள முன்னாள் தூதராவார்.
ஆனால், அவர் மற்றும் அவருடன் குறிவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் முதலான விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.