தமிழகத்தில் 18 வயதான புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சிவரஞ்சனி (18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார்.
சிவரஞ்சனி அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
செந்தில்குமார் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சிவரஞ்சனி சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர் உடல் மெலிந்து கொண்டே சென்றார். இதனைப் பார்த்த இருவீட்டாரும் சிவரஞ்சனியை திட்டி ஒழுங்காக சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதில் மன உளைச்சலுக்கு ஆளான சிவரஞ்சனி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயக்கம் அடைந்துள்ளார்.
இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி இறந்தார்.
இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருமணமான சிறிது காலத்திலேயே புதுப்பெண் சிவரஞ்சனி உயிரை மாய்த்து கொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.