இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான ஆய்வுகளின் படி தினமும் சராசரியாக 83 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில் பெண்ணொருவரின் உடல் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர். அங்கு சென்று பார்க்கும் போது பெண் அரைமயக்கத்தில் இருந்துள்ளார். மேலும், அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளது. பின்னர் அவசர ஊர்தியின் மூலமாக பெண்ணை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதியானது.
இந்த விசாரணையின் முதற்கட்ட தகவலில் மேற்கூறிய தகவல் வெளியான நிலையில், திருச்சியில் உள்ள காந்திமார்க்கெட் பகுதியில் இருக்கும் பெட்ரோல் பல்க் எதிரேயுள்ள முள்காட்டு பகுதியில் சரக்கு ஆட்டோக்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் ஆட்களின் நடமாட்டமும் சரியாக இருக்காது.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இப்பகுதியில் சுமார் 25 வயதுடைய பெண்மணி மிகவும் சோர்வான நிலையில் இருந்துள்ளார். இவரை கண்ட கண்காணிப்பு பணிக்கு சென்ற காவல் அதிகாரி பெண்ணிடம் விசனரை மேற்கொண்ட நேரத்தில், தன்னை இரண்டு வாலிபர்கள் கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் தனக்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மயக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான காவல் அதிகாரி, இது தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, பெண்ணை மீட்டு அவசர ஊர்தியின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மருத்துவமனையில் பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் பெயர் லிடியா என்பது தெரியவந்துள்ளது.
இவர் திருச்சி இரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10.30 க்கு இரண்டு வாலிபர்கள் சரக்கு ஆட்டோவில் தன்னை இப்பகுதிக்கு அழைத்து வந்தனர் என்றும், இவர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்த நேரத்தில் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டதால், பயந்துபோன வாலிபர்கள் தன்னை இங்கேயேவிட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர் என்றும் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து இளம்பெண்ணிடம் காம கொடூரங்களின் அங்க அடையாளங்களை கேட்டறிந்த காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்து வந்தனர். இந்த சோதனையில் பெண்ணை அழைத்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளதை அடுத்து, இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.