இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் எந்தவொரு பயணியும் சிரமத்திற்குள்ளாகாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, விமான நிலைய அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
அத்துடன் விமான நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்தவொரு பயணிக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாதென ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டில் இருந்து வெளியேறும் சாதார பயணி ஒருவர் விமான நிலையத்திற்குள் நுழையும் சந்தர்ப்பத்தில் இருந்து விமானத்திற்கு செல்லும் வரையிலான காலப்பகுதியை ஜனாதிபதி கண்கானித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு பிரிவிற்கு போதுமான அதிகாரிகளை இணைத்துக் கொண்டு, முடிந்தளவு பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது விமானத்திற்கு காத்திருந்த வெளிநாட்டு பயணிகளுடன் ஜனாதிபதி உரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்தார்.