முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை அறிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்திருந்த தீர்மானத்திற்கு புறம்பாக , சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக அவரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்க தீர்மானித்ததாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பாடாமல் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 20 பேரை கட்சியில் இருந்து நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இதன்போது தீர்மானித்துள்ளது.