சேர்பியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சேர்பியாவின் ஊடாக பிரான்ஸூக்கு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டு பின்னர் அவர் பயணித்த பெங்களூர் விமான நிலையத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு போர்க்காலத்தின் போது தமது பெற்றோருடன் இந்தியாவுக்கு அகதியாக சென்ற நிலையில் ராமநாதபுரம் முகாமில் தங்கியிருந்துள்ளார்.
தமிழகத்தில் கல்விகற்ற அவர் போலியான வகையில் இந்தியர் என்ற அடிப்படையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்று அங்கிருந்து சேர்பியாவுக்கு சென்றுள்ளார்.
எனினும் அவரை இந்தியர் என்ற அடிப்படையில் சேர்பிய அதிகாரிகள் பெங்களூருக்கு நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.