2025ம் ஆண்டின் பின்னர் தான் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் 2022ம் ஆண்டின் பின்னர் கருத்தில் கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாகவும், ஹர்ச டி சில்வா கூறியுள்ளார்.