எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தலைமையில், பரந்துபட்ட கூட்டணியொன்று அமைக்கப்படும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்துக் கட்சிகளும் இடம்பெறும் என்பதுடன், புதிய கட்சிகளும் உள்வாங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பேஸ்புக் வலைத்தளத்திலேயே மனோ கணேசன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தின் பின்னரே மனோ கணேசன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.