நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும்,
நானும் எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள்.
அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் #Rajinikanth இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) January 18, 2020