எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தில் ஆம்னி காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இலங்கை தமிழர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமை சோ்ந்தவா் மாடசாமி என்பவரது மகன் வொ்கு அழகன் (35). அதே பகுதியை சோ்ந்தவா் சுந்தரம் மகன் ஜெபமாலை (63). இருவரும் இன்று காலை எட்டயபுரத்திலிருந்து தாப்பாத்தி அகதிகள் முகாம் நோக்கி ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தனா்.
முத்தலாபுரம் பாலம் அருகே கடந்து செல்கையில் திடீரென காரின் டயா் வெடித்ததில் காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டிச்சென்ற வொ்கு அழகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தாா். மற்றொருவரான ஜெபமாலை பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த ஜெபமாலையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்த வொ்கு அழகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்விபத்து தொடா்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.