குளியலறையில் சுயநினைவின்றி விழுந்துகிடந்த இரு பிரித்தானிய இளம்பெண்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
லண்டனில் வாழும் இரண்டு இளம்பெண்கள், முறையே 17 மற்றும் 25 வயதுடையவர்கள், தங்கள் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்காக இந்தியா வந்துள்ளனர்.
குஜராத்தில் உள்ள ஒரு ஹொட்டலில் அவர்கள் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் குளியலறையில் சுயநினைவின்றி கிடப்பது தெரியவரவே, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அங்கு அவர்களது உயிர் பிரிந்துள்ளது.
குளியலறையில், தண்ணீரை சூடாக்குவதற்காக பயன்படுத்தப்படும் கருவியில் பயன்படுத்தப்படும் கார்பன் மோனாக்சைடுதான் அவர்களது மரணத்துக்கு காரணம் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.
அந்த பெண்களின் பெற்றோர், இது ஒரு விபத்துதான் என ஒப்புக்கொண்டுள்ளதால், சட்டப்பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
உயிரிழந்த பெண்களின் பெயர் உட்பட எந்த விவரங்களும் தற்போது வெளியிடப்படவில்லை.