உகண்டாவில் திருமணமான இரு வாரத்தில் மனைவி ஆண் என தெரிந்து கணவன் அதிர்ச்சியான நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கணவன் அவரது மதரீதியான கடமைகளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய குருவான முகமது முடும்பா என்பவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணுக்கும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சுவபுல்லா முகமதை திருமணமான நாள் முதல் தனது அருகில் வர அனுமதிக்கவில்லை. கேட்டதற்கு தனக்கு மாதவிடாய் என கூறியுள்ளார்.
இந்நிலையில் புதுப்பெண் சுவபுல்லா கணவர் வீட்டிலிருந்து துணிகள், பணம் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை திருடியதாக கைது செய்யப்பட்டார்.
அவரை பொலிசார் சோதனை செய்த போது சுவபுல்லா பெண்ணே கிடையாது, ஆண் என தெரியவந்தது.
மேலும் அவரின் உண்மையான பெயர் ரிச்சர்ட் (27) என்பது உறுதியானது. இது குறித்து பொலிசார் முகமதுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
பொலிசார் விசாரணையில் முகமது வீட்டில் திருடுவதற்காகவே சுவபுல்லா பெண் வேடமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து சுவபுல்லாவை பொலிசார் கைது செய்தனர். இந்த சூழலில் இந்த சம்பவத்தில் மேலும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சுவபுல்லா பெண் வேடமிட்டு இதே போல பல ஆண்களை ஏமாற்றி பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் இஸ்லாமிய மதகுருவான முகமது மதரீதியான கடமைகளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதோடு நாட்டின் சட்டத்தை மீறி ஆண் நபரை திருமணம் செய்து கொண்டதற்காக முகமது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.