சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 3ம் உலகப்போர் வெடிக்கும் என தீர்க்கதரிசியான பாபா வங்கா கணித்துள்ளமை தற்போது உண்மையாக நடந்துவிடுமோ என்ற வகையிலான அச்சப்படும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.
அந்த வகையில் சிரிய நாட்டு கிளர்ச்சியாளர்கள், அந் நாட்டின் 2வது மிகப் பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் முன் நகர்வை தடுத்து நிறுத்த ரஷ்யா வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலையிலும் அவர்கள் தலைநகர் டமாஸ்கஸை நோக்கி முன்னேறிவருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான தகவல்கள் பாபா வங்காவின் கணிப்பு தொடங்கும் காலம் என கருதப்படுகிறது.
சிரியா வீழ்த்தப்பட்டதும் உடனடியாக மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், இளவேனிற்காலத்தில், கிழக்கில் ஒரு போர் தொடங்கும். இதைத்தொடர்ந்து, 3ம் உலகப்போர் தொடங்கும், கிழக்கில் நடக்கும் போர், மேற்கை அழிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிரியா வெற்றிபெற்றவரின் காலில் விழும், ஆனால், வெற்றி பெற்றவர் அவராக இருக்கமாட்டார் என்றும் பாபா வங்கா கூறியுள்ளார். எனினும் அதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை.
இவ்வாறான நிலையில் பாபா வங்காவின் கணிப்பின்படியான நகர்வுகள் மட்டும் ஆரம்பமாகியுள்ளன என்பது மட்டும் நிதர்சனம் என அவரது கணிப்பை பின்பற்றுவோர் தெரிவிக்கின்றனர்.