லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பையும் பயங்கரவாதக் குழுவாக அறிவித்தது பிரித்தானியா.
பிரித்தானியாவின் பயங்கரவாத மற்றும் பயங்கரவாத நிதி விதிகளின் கீழ் ஹெல்பொல்லா அமைப்பை பயங்கரவாதக் குழுவாக அறிவித்தது என்றும், அதன் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பிரித்தானியா அரசாங்க விதிகளின் கீழ் ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவு சொத்துக்கள் மட்டுமே முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹெஸ்பொல்லா, 1982ம் ஆண்டில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் நிறுவப்பட்டது மற்றும் பிராந்திய தெஹ்ரான் தலைமையிலான கூட்டணியின் முக்கிய அங்கமாகும்.
ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவுக்கு எதிராக தற்போதுள்ள நடவடிக்கையின் வருடாந்திர மதிப்பீட்டைத் தொடர்ந்து, பயங்கரவாத சொத்து-முடக்கம் சட்டம் 2010 (TAFA) இன் கீழ் முழு அமைப்பையும் பயங்கரவாத குழுவாக அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டது என பிரித்தானியா நிதியமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தற்போதுள்ள ஹெஸ்பொல்லா இராணுவப் பிரிவு ஐரோப்பிய ஒன்றிய அளவிலான பயங்கரவாத குழு பட்டியலிலும் உள்ளது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இது நடைமுறையில் உள்ளது மற்றும் பிரித்தானியாவிற்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு பிரித்தானியா உறுதியுடன் உள்ளது, நாங்கள் எங்கள் லெபனான் தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.