ஈரானில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாத்திமா முகமதி என்ற 21 வயது இளம்பெண் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார், இதனால் இவர் ஈரானில் பிரபலமானார்.
அவரை ஈரான் பொலிசார் கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
உக்ரைன் பயணியர் விமானத்தை ஈரான் ஏவுகணை சுட்டு வீழ்த்திய பிறகு ஈரான் அரசை எதிர்த்து ஆசாதி சதுக்கத்தில் போராட்டம் நடந்தது.
அந்த இடத்தில்தான் பாத்திமா கைது செய்யப்பட்டார். மத மாற்றத்திற்கு பிறகு பாத்திமா தனது பெயரை மேரி என்று மாற்றிக்கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாத்திமா என்ற மேரி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அன்று பாத்திமா நிறைய டுவீட்டுகளை பதிவிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறியுள்ளதாவது;
ஈரானில் அரசு என்ன சொல்கிறதோ அந்த செய்திகள் மட்டுமே செய்தி ஏஜென்சிகள் மூலம் வருகின்றன.
ஈரான் மக்கள் அரசின் மென்மையான ஆதிக்கத்தை உணர்கிறார்கள். அரசின் மென்மையான கருத்து கணிப்பை விட கண்ணீர் புகை குண்டு தடியடி ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கிறது.
ஈரான் அரசு பொய்களையே திரும்பத் திரும்ப சொல்லி நம்ப வைக்கிறது என பதிவிட்டுள்ளார்.
பாத்திமா கிறிஸ்தவ மதத்தில் அதிக பற்றுள்ளவர் மதத் வளர்ச்சிக்காக பாடுபட்டார். இதனாலேயே ஏற்கனவே அவர் ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்.
சென்ற ஆண்டு இஸ்லாம் பெண்கள் அணியும் தலை ஸ்கார்ப் அணியவில்லை என்று அரசால் குற்றம் சாட்டப்பட்டார்.
பின்னர் அந்தக் குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.