அம்பாந்தோட்டை – ஹுங்கம பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பௌத்த துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதன் போது நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்த பௌத்த துறவி மீது குண்டு தாக்கியமையினால் பிக்கு உயிரிழந்துள்ளார்.