ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்கா நான்கு இராணுவ தளங்களை அமைக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் நான்கு அமெரிக்க இராணுவ தளங்களை அமைப்பது குறித்து அமெரிக்க இராணுவம் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், ஈராக் குர்திஸ்தான் பிராந்தியத் தலைவர் நெச்சிர்வன் பர்சானி மற்றும் ஈராக் குர்திஸ்தான் பிராந்தியத்தின் பிரதமர் மஸ்ரூர் பர்சானி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன் போது அமெரிக்க படைகளுக்கான தங்களின் ஆதரவு, ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் விலகுவதை நிராகரித்தல் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்தல், அத்துடன் குர்திஸ்தான் பிராந்தியத்தில் அல் ஹரிர் தளம் உட்பட நான்கு இராணுவ தளங்களை அமைப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
தூதரக உறவுகளை வலுப்படுத்துவது, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தின் தலைநகர் எர்பிலில் மிகப்பெரிய அமெரிக்க துணைத் தூதரகத்தைத் திறப்பது ஆகியவை கூட்டங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் அமெரிக்காவால் ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஈராக் நாடாளுமன்றம் அமெரிக்கப் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்ற வாக்களித்தது.
இந்நிலையில், சட்டவிரோதமான வகையில் அமெரிக்கா தனது படைகளை ஈராக்கின் வடக்கு பகுதிக்கு நகர்த்த முயற்சிப்பதாக தெரிகிறது, இது ஈராக்கின் இறையாண்மையின் மற்றொரு மீறலாக இருக்கும்.
அமெரிக்கப் படைகள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் விட்டு வெளியேற வேண்டும், ஈராக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு ஈராக்கிய குர்திஸ்தான் பிராந்தியத்தில் தங்கள் படைகளை நிறுத்துவதை அர்த்தமாக இருக்காது என்பதை ஈராக்கிய மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.