ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து இரண்டு வாரங்களின் பின்னர் அமெரிக்க சென்ற பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர் இம்முறை பொது தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படியிருப்பினும் சமகால அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பசில் ராஜபக்ஷவை தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த பசில், தனக்கு 2020ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எவ்வித ஆர்வமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு 2020ஆம் ஆண்டில் போட்டியிட அவசியம் இல்லை என்ற போதிலும் 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக பசில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள மாவட்டத்தை தெரிவு செய்வது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குழப்பமடைந்துள்ளார்.
10 இலட்சம் வாக்குகளை பெறலாம் என்பதனால் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுமாறு பிரதமரிடம் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் கம்பஹா மாவட்டத்தில் 18 இலட்சம் வாக்குகள் உள்ளமையினால் அந்த மாவட்டம் தொடர்பிலும் மஹிந்த அவதானம் செலுத்தியுள்ளார்.