கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – கதிர்காமம் வீதியில் ஹூங்கம பகுதியில் சற்று முன்னர் டிப்பர் ஒன்றும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐந்து பேர் பலியானதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளமையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.