அவுஸ்திரேலியாவில் 2 வயது சிறுமிக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட இந்தியருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
28 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்தவர், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் டார்லிங் துறைமுகத்தில் உள்ள SEA LIFE அருங்காட்சியகத்தில், ஒரு குழந்தையை அணுகியதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த நபருக்கும், சம்மந்தப்பட்ட குழந்தை அல்லது அவரது குடும்பத்தினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
குழந்தையின் பெற்றோர் அவரைத் தள்ளிவிடுவதற்கு முன்பு, அவர் குழந்தையை உதட்டில் முத்தமிட்டார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலே சம்பவ இடத்தை பொலிஸார் வந்தடைந்துள்ளனர்.
28 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு டே ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு 10 வயதுக்கு உட்பட்ட குழந்தையை வேண்டுமென்றே பாலியல் ரீதியில் தொட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இன்று மத்திய உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.



















