குழந்தைகள் பிறந்தவுடனே முதல் உணவாக அமைவது தாய்ப்பால். தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தும் தாராளமாக நிறைந்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு கட்டாயம் 6 மாதகாலம் வரை தாய்ப்பால் வழங்க வேண்டும்.
பெண்களின் உடல்நிலை மாற்றும் சத்தான உணவுகளை சாப்பிடாது இருத்தல் போன்ற சில காரணத்தால் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பானது ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு நாட்டுமருத்துவம் குறித்து நாம் காண்போம்.
மூலிகை கஷாயம்:
அதிமதுரத்தின் பொடியை சிறிதளவு எடுத்து கொண்டு, சிறிதளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அருகம்புல் சாறோடு தேன் கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
முருங்கைக்கீரை:
முருங்கைக்கீரையில் லேசாக தண்ணீர் விட்டு, நன்றாக வேகவைத்து தாளித்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். முருங்கையின் இலைகளுடன் பாசிப்பருப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
இதனைப்போன்று ஆலம் விழுதின் துளிர் விதையினை 5 கி அளவில் பாலில் கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். வெள்ளைப்பூண்டை நல்லெண்ணையில் பூண்டினை வதக்கி, இதனையுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்., உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.