தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பெப்ரவரி முதல் வாரத்தில் மொத்த படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது என தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக தளபதி விஜய் மற்றும் மாளவிகா மேனன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர் என்று சொல்கிறார்களே தவிர அவர்கள் இருவரும் இணைந்த மாதிரி ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை.
தளபதி விஜய்யின் தனிப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே சூட்டிங் ஸ்பொட்டில் இருந்து அவ்வப்போது வெளியாகி விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தளபதி ரசிகை ஒருவர் தளபதியின் மீதுள்ள அன்பினால் மாளவிகா மோகனனை திட்டி விட்டார். மேலும் மாளவிகா மோகனன் தளபதி விஜய் சைட் நடிக்கிறார் என பொங்கி எழுந்த ரசிகை, எப்டி பாக்றா பாரு, கண்ணுல ஈயத்த காச்சி ஊத்த என ஒருமையில் திட்டியுள்ளார்.
இந்த டிவீட்டிற்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் திகதி வெளியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
எப்டி பாக்றா பாரு😑😑🚶🏻♀️ கண்ணுல ஈயத்த காச்சி ஊத்த🙁😣
அழகா இருக்காரு வேற😍😍😍😍😍❤️❤️❤️💫💫💫 #Master pic.twitter.com/G4G7jqp5Xh
— விவேஹா✌🏻🕶🔥 (@Itz__Rai) January 19, 2020