19வது திருத்த சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய முயலும் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து முற்போக்கு சக்திகளும் இணைந்து போராட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் 19இன் ஊடாகவே சுதந்திரத்தை பெற்று தந்தது. எனினும் அதனை புதைத்து விட அரசாங்கம் முயல்வதாக அகில விராஜ் காரியவசம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.