ரஷியாவில் தற்போது கடுமையான குளிர் நிலவிவருகிறது. இதனால் வீடுகள், ஹோட்டல்கள் என அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் பயன்பாட்டிற்காக குழாய் மூலம் வெந்நீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் அந்நாட்டின் பிரேம் என்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ள வெந்நீர் குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.