யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்கதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால், அளவீட்டுக்குச் சென்ற யாழ் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான குறித்த காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மேற்கொள்வவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காலை அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது காணிகளை அளவிடுவதற்கு காடுகளின் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசுயல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
அதோடு முஸ்லிம் குடியேற்றத்தை உருவாக்க காணி சுவீகரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சுமத்திய பிரதேசவாசிகள், அங்கு முஸ்லிம் குடியேற்றம் உருவாக்க காணி சுவீகரிக்கப்படுவதாக முன்னர் வெளியான செய்திகளையும் சுட்டிக்காட்டினர்.
இதன் போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதை அயடுத்து சம்பவ இடத்திற்கு யாழ் பிரதேச செயலாளர் சுதர்சன் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
ஆயினும் மக்களும் , அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காணி அளவீடுகள் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.