ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்துத் தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு இன்று அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தயார்படுத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.