உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டி தகவலை பதிவிறக்கம் செய்ய அமெரிக்கா, பிரான்ஸிடம் உதவி கோரியுள்ளது ஈரான்.
176 பேரை பலி வாங்கிய உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புமாறு கனடா, உக்ரைன் மற்றும் பிற நாடுகள் ஈரானுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தது.
முன்னதாக இதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் பதிலளித்த ஈரான், பின்னர் கருப்பு பெட்டிகளை தாங்களே ஆய்வு செய்யவுள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில், உக்ரேனிய விமானம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஈரான் தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், விபத்துக்குள்ளான உக்ரேனியா விமானம் போயிங் 737ல் நிறுவப்பட்ட ரிக்கார்டர்களில் இருந்து தரவைப் பதிவிறக்குவதற்குத் தேவையான உபகரணங்கள் எங்களிடம் இல்லை.
அமெரிக்க மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளிடமிருந்து உபகரணங்களுக்கான கோரிக்கைகளை விடுத்துள்ளோம்.
அதன் மூலம் உக்ரேனிய பயணிகள் விமானத்தில் கருப்பு பெட்டிகளில் இருந்து தகவல்களை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆனால். இதுவரை இரு நாடுகளிடமிருந்தும் எந்த பதில் கிடைக்கவில்லை என ஈரான் உள்ளுர் விமான அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும். ஈரானுக்குள் விமானத் தரவுகளையும் குரல் பதிவுகளையும் ஆய்வு செய்து வருவதாக உள்ளுர் விமான அமைப்பு தெரிவித்துள்ளது.