நாட்டின் உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி முதல் முறையாக ஒப்புக் கொண்டார்.
கோட்டாபய ராஜபக்ச தலைநகர் கொழும்பில் ஐ.நா தூதருடனான சந்திப்பில் இந்த கருத்தை தெரிவித்தார்.
காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருடனான ஜனாதிபதியின் சந்திப்பில் அவர் கூறியதாவது, காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டனர் என்று அவர் விளக்கினார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அதற்கான சான்றளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர்களில் என்ன ஆனது என்பது அவர்களுக்குத் தெரியாது, எனவே அவர்கள் காணவில்லை என்று கூறுகின்றனர் என அவர் கூறினார்.
இலங்கை சட்டத்தின் கீழ், இறப்புச் சான்றிதழ்கள் இல்லாததால்குடும்பங்கள், சொத்து பத்திரங்கள், வங்கி கணக்குகள் அல்லது காணாமல் போன உறவினர்கள் விட்டுச்சென்ற பரம்பரை சொத்துக்கள் ஆகியவற்றை அணுக முடியாது என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கையில் 26 வருடங்களாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் மே 2009ல் முடிவுக்கு வந்தது. தமிழ் புலி கிளர்ச்சியாளர்களை இலங்கை இராணுவம் தோற்கடித்தது.
இந்த உள்நாட்டுப் போரில் 1,00,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 20,000, பெரும்பாலும் தமிழர்கள் காணவில்லை. ஜனாதிபதி ராஜபக்ச அப்போது இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
போரின் முடிவில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையில் நடந்த அட்டூழியங்களுக்கு இரு தரப்பினரும் மீதும் குற்றம் சாட்டியது. காணாமல் போனவர்கள் தொடர்பில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை எந்தப் ராஜபக்ச அரசு மறுத்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோட்டாபய ராஜபக்ச, தனக்கு எதிரான போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறினார்.
இலங்கை இராணுவம் மற்றும் தமிழ் கிளர்ச்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு போர்க்குற்ற தீர்ப்பாயத்தை நிறுவுமாறு ஐ.நா மற்றும் பிற உரிமைக் குழுக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
இதுபோன்ற முயற்சிகளை அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் எதிர்த்தன, இது உள்நாட்டு பிரச்சினை என்றும் குற்றச்சாட்டுகளை உள்நாட்டில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.