தமிழகத்தில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அருகம்பாளையத்தில் விவசாயக் குடும்பம் ஒன்று தோட்டத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தது. அந்த விவசாயிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு சதீஸ்குமார் (27) என்பவர், அந்த பகுதியில் தங்கியிருந்து கிடைக்கும் வேலைக்குச் சென்று வந்தார்.
அப்போது, சதீஸ்குமார் அந்தச் சிறுமியை அடிக்கடி பின்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் திகதி இரவு 11.30 மணியளவில் சிறுமி தங்களது தோட்டத்தில் உள்ள மோட்டாரை அணைக்கச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த சதீஷ்குமார், `திருமணம் செய்து கொள்ளலாம் வா என்று சிறுமியை வற்புறுத்தி மோட்டார் சைக்கிளில், ஓதிமலை பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளார்.
பிறகு, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் குற்றவாளியை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குற்றவாளியான சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.