இந்தியாவில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரை சேர்ந்தவர் கிஷோர் குமார்.
இவரும் கவிதா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமானார். இந்நிலையில் கடந்த வாரம் கவிதாவுக்கு குழந்தை பிறந்தது.
ஆனால் கவிதாவை திருமணம் செய்ய விரும்பாத குமார், பூனம் என்ற மணக்க விரும்பி திருமண ஏற்பாடுகளும் நடந்தது.
ஆனால் இந்த திருமணத்துக்கு கவிதா எதிர்ப்பு தெரிவித்தார், இதையடுத்து இருவரையும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் குமார்.
இதற்கு இரண்டு பெண்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்கள் திருமணம் ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமண நிகழ்வின் போது பிறந்து ஒரு வாரமே ஆன கவிதாவின் குழந்தையையும் மணமக்கள் வைத்திருந்தனர்.
இரண்டு பெண்களை குழந்தையுடன் குமார் மணந்த இந்த சம்பவம் அந்த ஊரில் விவாத பொருளாக மாறியுள்ளது.