நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மொத்த குடும்பத்தினரையும் எச்சரித்து காப்பாற்றிய 6 வயது சிறுமியை பலரும் ஹீரோ என புகழாரம் சூட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஜிம்மி கார்ல்பன் என்பவர், தனது மனைவி மடலின், 6 வயது மகள் மடலின் கார்ல்பன் மற்றும் 2 வயது மகன் ஹண்டர் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
ஜனவரி 19 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது, திடீரென அவர்களுடைய வீட்டில் தீ பிடித்துள்ளது.
அப்போது வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த புகை கண்டுபிடிப்பான் சத்தம் எழுப்பியுள்ளது. அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்ததால், கவனிக்காமல் இருந்துள்ளனர்.
ஆனால் அந்த நேரத்தில் எழுந்த அவர்களுடைய 6 வயது மகள், வேகமாக ஓடிச்சென்று தந்தையை எழுப்பியுள்ளார். அவர் எழுவதற்குள்ளாக வீட்டின் பல இடங்களிலும் தீ வேகமாக பரவியிருக்கிறது.
உடனே விரைந்து செயல்பட்ட அவர் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் மகனை வேகமாக காப்பாற்றி வெளியில் அழைத்து வந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அவர்களுடைய வீட்டின் பாதிப்பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும், உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமடைந்துள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில், மடலின் தனது குடும்பத்தை காப்பாற்ற விரைவான நடவடிக்கை எடுத்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
In wake of the sadness we all are feeling today for our Brother FF Jimmy Karlbon and his family, we think it's only…
Publiée par Avenel Fire Department sur Dimanche 19 janvier 2020