வெற்றி என்பது ஒரு மனிதனை எந்த உயரத்திலும் கொண்டு போய் நிற்க வைக்கும். வெற்றிக்கு வறுமை தடை அல்லவென பல்வேறு தடைகளை தாண்டி வவுனியா மாணவன் உலகளவில் சாதனை படைக்க செல்லவுள்ளார்.
அந்த வகையில் விபுலானந்தா கல்லூரி மாணவன் நாகராஜா தியாகராஜா உலகளவில் குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைப்பதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி பாகிஸ்தான் செல்லவுள்ளார்.
மிகச் சிறந்த வாழ்க்கை முறையே உண்மையான வெற்றிக்கு அடையாளம். அது அவனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தும்.
ஒருவர் தான் தீர்மானமாக நினைக்கும் ஒரு விடயத்தை எண்ணியது போல முடித்து விட்டாலே அது வெற்றி தான்.
இந்த நிலையில் வெற்றியில் அளவுகோல் என்று எதுவும் இல்லையென்பதை அம்மாணவன் வறுமையின் மத்தியில் போராடி தகர்த்து எறிந்து வெற்றி பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் மென்மேலும் வளர பலரும் பாராட்டி வருகின்றனர்.