கனடாவில் வாழ்ந்து வந்த குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது கணவரை பொலிசார் தேடி வந்தனர்.
ரொரன்றோவைச் சேர்ந்த Heeral Patel (28) காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், Bramptonஇல் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கணவன் மற்றும் அவரது உறவினர்களுடன் பிரச்சினை என்பதால் Heeralம் அவரது கணவர் ராகேஷ் படேலும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்தனர்.
பொலிசார், Heeral கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, அவரது கணவர் ராகேஷை பிடிக்க வாரண்ட் ஒன்றை பிறப்பித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று Etobicoke என்ற இடத்தில் ராகேஷ் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடலையும், நாயுடன் நடை பயிற்சிக்கு சென்ற ஒருவர்தான் கண்டுபிடித்துள்ளார்.
ராகேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீதான வாரண்ட் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.