சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் இளம் பெண்ணை கத்தி முனையில் சீரழித்த இளைஞருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
போர்த்துக்கல் நாட்டவரான 26 வயது இளைஞர், சுவிட்சர்லாந்தில் சாலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது முன்னாள் காதலியின் குடியிருப்புக்கு சென்ற இவர்,
தொடர்ந்து அவரது வங்கி அட்டையில் இருந்த சுமார் 800 பிராங்குகள் தொகையை கைப்பற்றிவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைதான அந்த போர்த்துக்கல் இளைஞர்,
விசாரணைக் கைதியாக கடந்த ஓராண்டு காலமாக சிறையில் உள்ளார். மேலும், வழக்கின் தன்மை கருதி மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லூசெர்ன் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து,
நீதிமன்ற செலவீனங்களுக்காக 12,000 பிராங்குகள் தொகையும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு 10,000 பிராங்குகள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.