வவுனியா – தாண்டிக்குளத்தில் கால்நடை குறுக்கிட்டதனால் கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி கோழி தீவனத்தை ஏற்றி வந்த கனரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஏ9 வீதியை குறுக்கிட்ட கால்நடையால் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வாகன சாரதி உயிர் தப்பியுள்ள நிலையில், கால்நடையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக கால்நடைகளினால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், நகரசபையினர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.